Freelancer / 2025 ஜூலை 20 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்று (20) இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தனி நபர்களுக்கிடையே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனிநபர்களும் இரு பிரிவுகளாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. R
9 hours ago
9 hours ago
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
02 Feb 2026