Niroshini / 2021 மே 18 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவப் பீடத்தைச் சேர்ந்த எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று, பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதியன்று, வணிக முகாமைத்துவப் பீடத்தின் சமகால சர்வதேச ஆய்வியல் மாநாடு இடம்பெற்றிருந்த நிலையில், அந்தப் பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, பீடத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு, பீடத்தைச் சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 74 பேருக்கும் இம்மாதம் 6ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், தொற்றுக்குள்ளான விரிவுரையாளருடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று பொதுச் சுகாதார பரிசோதகரால் அடையாளப்படுத்தப்பட்ட 19 பேர் மீண்டும் கடந்த 8ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் கடந்த 13ஆம் திகதி மீளவும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.
அதன் முடிவுகளின் படி, அவர்களிலும் எவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago