Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 24 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையை விரைவுபடுத்துமாறு, கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரி.ரிசியந்தன் தெரிவித்தார்.
வன்னேரிக்குளம் சிறுபோக நெற்செய்கைக் கூட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் தலைமையில், நேற்று (23) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசனப் பொறியியலாளர், “வன்னேரிக்குளத்தில் புனரமைப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால், சிறுபோக நெற்செய்கையை குறிப்பிட்ட கால எல்லைக்குள் விவசாயிகள் வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத் தீர்மானத்தின் படி, 246 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்களால், விவசாயிகளின் பயிர்ச் செய்கைக்கு கடன் வசதி ஏற்படுத்தி தருவதாகவும் பயன் பெற்றுக் கொள்ளக் கூடிய விவசாயிகள் தமது வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். (N)
22 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
4 hours ago