2025 மே 17, சனிக்கிழமை

வயிற்றோட்டத்தால் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 மே 28 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவரது உயிரிழப்புக்கு முட்டை விஷமாயிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனை அறிக்கை மூலமே காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2 இல் பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவனும் அவரது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சுமார் 17 நாள்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 7 வயது மாணவன் இன்று (28) காலை உயிரிழந்துள்ளார்.

மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவனும் அவரது சகோதரர்களும் உட்கொண்ட முட்டை விஷமாகியதால் ஒவ்வாமை ஏற்பட்டு சுகயீனத்துக்குள்ளாகினர் என தெரிவிக்கப்பட்ட போதும் இறப்பு விசாரணையின் பின்னரே காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .