2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு பிரேரணை நிறைவேற்றம்

Thipaan   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்  

ஜனாதிபதியால் விடுக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டுமென  ஐனாதிபதியைக் கோரும் பிரேரனையொன்று, வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 90 ஆவது அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ச.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (06) நடைபெற்றது.

இதன் போது வடக்கு மாகாண எல்லைக்குட்பட்ட முசலி பிரதேசத்தின் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி அருவியாற்றின் வவுனியா மன்னார் எல்லைப் புறங்களை மாவில்லு வளப்பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் 2017 மார்ச் 24 ஆம் திகதிய 2011ஃ 34 இலக்க வர்த்தமான அறிவித்தலும், மறிச்சுக்கட்டி பிரதேசத்தை வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் புற எல்லைப் பகுதியாக அறிவிக்கும் 2012 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் காணி அதிகாரங்களை கருத்திலெடுக்காததும், யுத்தத்துக்குப் பிந்திய சூழ் நிலையில் மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை கருத்திலெடுக்காதும் மேற்கொள்ளப்பட்ட வர்த்தமாணி அவித்தல்களாகும்.

எனவே மேற்படி ,ரண்டு வர்த்தமானி அறிவித்தல்களையும் உடனடியாக இரத்துச் செய்து மக்களின் நலன்களை உறுதி செய்வதற்கு நடக்க எடுத்தல் வேண்டுமென என ஐனாதிபதியைக் கோரும் பிரேரணையொன்றை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அயூப் அஸ்மின் கொண்டு வந்திருந்தார்.

இப் பிரேரனை தொடர்பான வாதங்களின் போது சபையின் ஆளும் கட்சி மற்றுமு; எதிர்க்கட்சி குறிப்பாக எதிர்க்ட்சியைச் சேர்ந்த சிங்கள உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதன் பின்னர் சபையில் அனைவரதும் ஆதரவுடன் ஏகமனதாக மேற்படி பிரேரனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் மேற்படி வர்த்தமானி அறிழவித்தல்களை ஐனாதிபதி இரத்துச் செய்ய வேண்டும் என ஐனாதிபதியைக் கேபாருவதெனத் தீர்மானிக்கப்ட்டு இதனை ஐனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்படுமென்றும் அவைத்தலைவர் சிவஞானம் சபையில் அறிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .