Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
வலிகாமம் வடக்கு உயர்;பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் காணிகளில், மேலும் 800 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு உடன்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட காணிகளில் 500 ஏக்கர்; காணிகள் மட்டுமே மக்கள் மீளக்குடியமர ஏதுவாக உள்ளதாகவும் அத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதில் காங்கேசன்துறை கிழக்கு ஜே-233, காங்கேசன்துறை மத்தி ஜே-234, காங்கேசன்துறை மேற்கு ஜே-235, பளை வீமான்காமம் ஜே-236, தையிட்டி ஜே-250 போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள காணிகளே விடுவிப்பதற்கு இணங்காணப்பட்டுள்ளன. இதேவேளை, இப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளும் விடுவிக்கப்படவுள்ளன.
ஆவிளாய் சந்தியில் இருந்து காங்கேசன்துறை செல்லும் வீதி, நடேஸ்வரா வீதி, தையிட்டி வீதி உட்பட முக்கிய வீதிகளும் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளன.
வலிவடக்கு மீள்குடியேற்றத்தை பூரணப்படுத்துவதற்காக 6 மாதகால அவகாசத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார்.
இதில் ஒரு தொகுதி காணிகள் இவ்வருட ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்;ச்சியாக காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டி, பகுதிகளை உள்ளடக்கிய 201.3 ஏக்கர் காணிகள் கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, குறித்த பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்;வதற்குரிய ஆரம்பகட்ட நடவடிக்கையாக காணிகளை துப்புரவு செய்து, எல்லை வகுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்ட பகுதிகளில் மக்கள் மீளக்குடியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடர்;பில், மாவட்ட செயலர் என்.வேதநாயகன் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றார்.
16 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
33 minute ago