2025 ஜூலை 19, சனிக்கிழமை

வழக்குத் தவணைகளுக்குச் சமூகமளிக்காதவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாயில் வழக்குத் தவணைகளுக்குச் சமூகமளிக்காத ஒருவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸநாயக்க திங்கட்கிழமை (04) உத்தரவு பிறப்பித்தார்.                                     

மோட்டார் சைக்கிள் திருடிய சம்பவம் தொடர்பான வழக்கு கந்தளாய் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குறித்த நபர் பல வழக்குகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்துள்ளார்.

இதையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் திங்கட்கிழமை(04) காலை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.                              

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X