2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வாராந்தம் அறிக்கை சி.விக்கு செல்லும்?

Editorial   / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என பொலிஸார் தன்னிடம் தெரிவித்துள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து, வாராந்தம் அறிக்கையை தன்னிடம் சமர்பிக்க வேண்டும் எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் இல்லத்தில் நேற்று (10) நடைபெற்ற பொலிஸாருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழில் இயங்கும் ஆவா மற்றும் தனு ரொக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களே, வாள் வெட்டு சம்பவங்களுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், குறித்த குழுவில் உள்ளவர்களின் ஒளிப்படங்கள், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களின் ஒளிப்படங்கள், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களின் ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் எனக்கு காட்டினார்கள். 

தற்போது குறித்த குழுக்களின் செயற்பாடுகளை தாம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .