Freelancer / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்திய வந்த நிலையில் ஒருவர் ஊர் இளைஞர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்
சங்கரத்தைச் சந்தியில் நேற்று (01) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வட்டுத்தெற்கு மற்றும் மூளாய் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு வாள்களுடன் நடமாடியுள்ளனர்.
அதனை அவதானித்த வட்டுக்கோட்டை இளைஞர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு வழிமறிக்க முற்பட்ட வேளை மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி வீதியில் வீழ்ந்துள்ளனர். அவர்களில் இருவர் வாள்கள் இரண்டை கைவிட்டு தப்பித்த நிலையில் ஒருவர் காயங்களுடன் சிக்கிக்கொண்டார்.
வாள்களுடன் சிக்கிக்கொண்ட மூளாயைச் சேர்ந்தவர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இரண்டு வாள்கள் மற்றும் மோட்டார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (a)
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago