2025 மே 19, திங்கட்கிழமை

வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த வீட்டுக்கு இன்று (13) அதிகாலை 2.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் முகமூடிகளை அணிந்து வாள்களுடன் சென்றுள்ளனர். இதன் போது வீட்டின் முன்பாக இருந்த மின்குமிழை அடித்து உடைத்ததுடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினை அடித்து உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து  நொருக்கியுள்ளனர். ஆயினும் இதன் போது வீட்டிலிருந்தவர்கள் அச்சம் காரணமாக வெளியே வரவில்லை.

இவ்வாறு கார் மற்றும் வீட்டை அடுத்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்தே வீட்டுக்காரர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X