எம். றொசாந்த் / 2019 மார்ச் 06 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.மட்டுவில் பகுதியில் வாள் வெட்டுகும்பல் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (05) செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவை கோடாலியால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளரான சமாதான நீதவான் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த 20க்கும் மேற்பட்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. குறித்த கும்பல் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மட்டுவில் சந்தியில் கூடி நின்று அட்டகாசம் புரிந்துள்ளனர். அதனால் தாக்குதலுக்கு இலக்கான வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் உதவிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
13 minute ago
25 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
57 minute ago