2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விடுதலையான அரசியல் கைதிக்கு வாழ்வாதார உதவி

Freelancer   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாம் வட்டாரம் - கைவேலி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் என்பவர், நீண்டகாலமாக அரசியல் கைதியாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்து, கடந்த ஆண்டு விடுதலையானார். 

அவர் தனது இயல்பு வாழ்வுக்கான வருமானத்தை  ஈட்டிக்கொள்வதற்காக தன்முனைப்பு கொண்டு சிறு அளவிலான எண்ணெய் உற்பத்தி சுய தொழில் முயற்சியை செய்து வந்திருந்தார்.

இந்நிலையில், அவரது வேண்டுகோளுக்கமைய, குறித்த சுய தொழில் முயற்சியை மேலும் ஊக்குவித்து மேம்படுத்துவற்காக அமெரிக்கா, நியூயோர்க் வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளின் நிதி அனுசரணையின் மூலம் எண்ணெய் உற்பத்தி ஆலையாக தரமுயர்த்தி கையளிக்கும் மனிதநேயப் பணி, குரலற்றவர்களின் குரல் ஒருங்கிணைப்பாளரான முருகையா கோமகனின் தலைமையில் நேற்று (22) நடைபெற்றது.

இதன்போது வெண்கரம் அமைப்பின் புலம்பெயர் செயற்ப்பாட்டாளர் அமெரிக்காவைச் சேர்ந்த செல்லத்துரை சண்முகபாஸ்கரனால் எண்ணெய் உற்பத்தி ஆலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கனடாவைச் சேர்ந்த சின்னத்துரை சத்தியானந்தன், அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கனகசபேசன் மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்ப்பாட்டாளர் போல் வந்தனா ஆகியோர் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X