Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2018 ஜனவரி 14 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் விடுவிக்கப்பட்ட குரும்பசிட்டி மற்றும் வயாவிளான் பகுதிகள் ஊடாக இடம்பெற்று வந்த மரக்கடத்தல் மற்றும் சுண்னாம்புகல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதில், பலாலி பொலிஸார் மும்முரமாக செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கமைய, இப்பகுதிகளில், இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் சிலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவ்வாறு உரிமையாளர்கள் இல்லாத காணிகளுக்குள் நுழையும் திருடர்கள், அங்குள்ள பெறுமதியான மரங்கள் மற்றும் சுண்ணாம்பு கற்கள் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களில், அச்சுவேலி மற்றும் தெல்லிப்பளை பொலிஸாரால் அதிகளவான சுண்ணாம்பு கல் அகழ்வில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
பலாலி பொலிஸ் நிலையம் தற்போதும் உயர் பாதுகாப்பு வயலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படுவதால், வயாவிளான் - குரும்பசிட்டி மற்றும் பலாலி பிரதேசங்களில் மீள்குடியமர்ந்த மக்கள், அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களையே நாடவேண்டிய நிலை காணப்படுகிறது. மிக நீண்ட பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளை ஒருமித்து தனியே அச்சுவேலி பொலிஸாரால் நிர்வகிக்க முடியாத நிலை காணப்பட்டது.
தற்போது, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய, பாலாலி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago