எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வலி.வடக்கில் சில வீதிகளை இராணுவத்தினர் விடுவிக்காமையால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக” வலி.வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வலி.வடக்கில் கடந்த 27 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 680 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த வாரம் மீள உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
அந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆவளை சந்தியில் இருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடிசந்தி வரையிலான கட்டுவான் வீதிக்கு செல்லும் வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாடிற்குள் உள்ளது.
இராணுவத்தினர் வீதிக்கு குறுக்காக உயர் பாதுகாப்பு வலய முள் வேலிகளை அமைத்துள்ளனர்.
அதனால் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தமது காணிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக” தெரிவித்தார்.
36 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago