Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 16 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா - கன்னாட்டி பகுதியில் தனது மகள்களை பாடசாலைக்கு அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது ஒரு மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று (16) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.
இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.
விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்றொரு 6 வயது மகள் டிப்பர் வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி (வயது 38), நிருபா (வயது 9) என்ற இருவரே மரணமடைந்தனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற போது டிப்பர் வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை, விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சராமரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன், அதனை எரிப்பதற்கு முற்பட்டனர்.
இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன், மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணி நேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (N)
18 minute ago
29 minute ago
34 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
34 minute ago
35 minute ago