Editorial / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொரு பிரதேசங்களில் வித்தியாசமாகக் நடத்தப்படும்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள், சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.
தென் பகுதியில் இருந்து யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிலையில் அதனை காண்பதற்காக பெருமளவு மக்கள் ஒன்றுகூடினர். ( நிதர்ஷன் வினோத்)





15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025