Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 29 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா
யாழ் வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (29) அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் அந்த வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்தன. மோட்டார் சைக்கிள் இரண்டு அடித்துச் சேதமாக்கப்பட்டன.
8 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஆரியகுளம் சந்தி பகுதியில் வாகன திருத்தகம் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உரிமையாளர் நேற்று (28) இரவு 2 முச்சக்கர வண்டிகளை வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில், பெரும் சத்தம் கேட்டதையடுத்து வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது 8 பேர் முகமூடியுடன் வீட்டின் முன்னால் நின்றுள்ளனர்.
அந்தக் கும்பல் மேற்கொண்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் முச்சக்கரவண்டிகள் இரண்டும் தீ பற்றி எரிந்துள்ளன. மோட்டார் சைக்கிள்கள் இரண்டு சேதமாக்கப்பட்டுள்ளன. வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .