Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ், கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (16) இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் வீட்டின் ஒருபகுதி சிறியளவில் தீக்கிரையாகியுள்ளதுடன், பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இரவு 9 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் கதவினையும் அடித்து உடைத்துள்ளனர்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அயல் வீட்டாரின் மீதும் அவர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். இருப்பினும் சுதாகரித்து கொண்ட அயல்வீட்டுக்காரர் திரும்பி வீட்டுக்குள் ஓடியதால் அவரின் வீட்டு கதவின் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago