Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. மகா

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் பருத்தித்துறை பிரதேச சபையை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற சபையின் முதலாவது அமர்வில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஜெயபாலனை வென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அ.சா. அரியகுமார் தவிசாளராகத் தேர்வானார்.
தவிசாளருக்கான தேர்வின்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் எட்டு உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர், பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரென 17 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பைக் கோரியிருந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு முறையில் இடம்பெற்ற தவிசாளருக்கான தேர்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் எட்டு உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர், பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினர் ஆதரவுடன் 13 வாக்குகளை பெற்ற அ.சா. அரியகுமார், தனது கட்சியின் நான்கு உறுப்பினர்களின் வாக்குகளை மாத்திரமே பெற்ற ஜெயபாலனை வென்று தவிசாளரானர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிம் தமிழர் விடுதலைக் கூட்டணியும் வாக்களித்திருக்கவில்லை.
இதேவேளை, அ. சா. அரியகுமார் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் உப தவிசாளராக, ஏகமனதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாலசிங்கம் தினேஸ் தெரிவானார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025