Editorial / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
காங்கேசன்துறை வீதி - இணுவில் பகுதியில், ஆதரவின்றி நிலையில் தனியே நின்ற பெண்ணை, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு, நேற்று (15) இரவு மீட்டுள்ளது. பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண், இரவு 11 மணியளவில் தனிமையில் நின்றதை அவதானித்த மக்கள், அது தொடர்பில், யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொறுப்பதிகாரி, அப்பெண்ணை மீட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண், மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை, யாராவது இங்கு கூட்டி வந்து விட்டிருக்கலாமென, பொறுப்பதிகாரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .