Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மே 12 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
விடுதலைப் பயணத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் தியாகங்கள் வீண் போகவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
தென்னிலங்கையில் நடைபெறுகின்ற சம்பவங்களின் மூலம் தற்போது நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கள பேரினவாதம் பலவீனம் அடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் இது என்றும் அவர் தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் தூபிக்கு முன்னால் இனப் படுகொலைகளை ஆவணப்படுத்தல் நிகழ்வு இன்று (12) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்கள் மீது இனப் படுகொலை செய்து அந்த ராஜபக்ஷ, சொந்த மக்களாலேயே துரோகி என்றும் கொலைகாரன் என்றும் பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் கண்முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
“கோட்டாபய ராஜபக்சவும் விரைவிலேயே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பம்.
“அவர் வீட்டுக்குச் செல்வது மட்டுமல்ல, அவர் மேற்கொண்ட இனப் படுகொலைக்காக சர்வதேச சட்டங்களின் முன் நிறுத்தப்பட்டு, அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
“அந்த வகையில், தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் இது. தற்போது சிங்கள பேரினவாதம் பலவீனமடைந்திருக்கின்றது. தங்களுக்குள் மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.
“ஒரு தீர்வுக்காக ஒன்றுபட்டு, இந்தியாவினுடைய கூலிகளாக இருக்கின்ற தமிழ் தலைமைகள் இந்தியாவுக்காக 13ஆவது திருத்தச்சட்டத்தை முன்னெடுக்காது கை விட்டு ஒதுங்க வேண்டும் ”என்றார்.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago