2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வெதுப்பகங்கள் மூடப்பட வேண்டிய அபாய நிலை

Freelancer   / 2022 மார்ச் 05 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ். மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட   வெதுப்பக  உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

வடக்கிற்கான பிறீமா மா  விற்பனை முகவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இன்று  இடம்பெற்றது.  

இதில், யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான  மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள்.

எனினும்  எமக்கு வழங்கப்படும் மாவின்  அளவினை குறைக்க வேண்டாம் என்று  கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் ஒரு காரணத்தை கூறின.

எதிர்வரும் நாட்களில் யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மாவின் அளவினை உடனடியாக குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் உற்பத்தி  அளவினை குறைக்கவுள்ளோம். 

பிறீமா நிறுவனம்  தற்காலிகமாக யாழிற்கு வழங்கும்  மாவின் அளவை குறைக்க உள்ளது.

அத்தோடு எதிர்வரும் நாட்களில்  இன்னும் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி நாம் செயற்படுகிறோம்

எனினும் தற்போதுள்ள நிலையில் பேக்கரி உற்பத்தியை குறைக்க உள்ளோம். எனினும் இது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி எமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ந்து பெற்று தருமாறு  தெரிவிக்கவுள்ளோம்.

எதிர்வரும் நாட்களில் யாழ். மாவட்டத்தில் பேக்கரிஉற்பத்தி பொருட்களின் அளவினை குறைக்க உள்ளோம்.

மாவட்ட அரசாங்க பிறீமா நிறுவனத்துடன் கலந்துரையாடி நமக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுகிறோம். 

மா வழங்கப்படாவிட்டால் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் அத்தோடு எரிபொருள் பிரச்சனையும் தற்போது காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருக்குகோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றோம்.

வெதுப்பகங்கள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளர் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுத்த காலத்தில் கூட நாம் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கான உற்பத்தி பொருட்களை வழங்கி இருந்தோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் அவ்வாறு செயற்பட முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .