2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வெளிநாடு செல்வோருக்கு யாழில் பி.சி.ஆர்

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில் இன்று முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .