Freelancer / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வலியுறுத்தி திங்கட்கிழமை (29) காலை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை (27) சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்திருக்கும் இடையே மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 1 விசைப்படகையும் அதிலிருந்து 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று (28) இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி மீனவர்களையும் இலங்கையில் உள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் திங்கட்கிழமை(29) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார். (R)
20 minute ago
44 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
44 minute ago
47 minute ago