2025 மே 22, வியாழக்கிழமை

வைத்தியசாலைக்குள் வைத்து தாக்குதல்

Editorial   / 2018 ஜூலை 30 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வாள்வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மீதும் அவர்களைப் பார்க்கச் சென்றவர்கள் மீதும் வைத்தியசாலைக்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று, பருத்தித்துறையில் நேற்று  (29) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், வரணி பகுதியில், வௌ்ளிக்கிழமை (27) மரணச் சடங்கு ஒன்றில், இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது. இதில் 5 பேர் காயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, வைத்தியசாலைக்குள் புகுந்த கும்பலொன்று, இவர்கள் மீதும் இவர்களை வைத்தியசாலைக்குப் பார்க்கச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .