2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘வைத்தியசாலைக்கு பொதிகளை எடுத்து வர வேண்டாம்’

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனால் வைத்தியசாலைக்குள் வருவோரை சோதனையின் பின்னரே உள்நுழைய அனுமதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனால் அவர்கள் தம்முடன் எடுத்து வரும் பொதிகளையும் சோதனையிட்டு அனுமதிக்க வேண்டி உள்ளமையால் வீண் கால தாமதம் ஏற்படுகின்றது.

எனவே நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தம்முடன் தேவையற்ற பொதிகளை எடுத்து வருவதனை தவிர்ப்பதன் மூலம் வீண் சிரமங்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .