2025 ஜூலை 19, சனிக்கிழமை

வீதிகளை புனரமைப்பதற்கு 251 மில்லியன் ரூபாய் தேவை

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட 133.71 கிலோ மீற்றர் நீளமான, 38 வீதிகளை புனரமைப்பதற்கு சுமார் 251 மில்லியன் ரூபாய் நிதி தேவையென பிதேச சபையினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலி குடியிருப்பு வீதிகள் பல, நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ளதால், அவ்வீதி வழியே பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

இவற்றில் சில வீதிகள், எவ்வித புனரமைப்புக்களும் இன்றி அழிவடைந்துள்ளன. இதனால், பருவமழை காலத்தில் கழிவு நீர் வழிந்தோடும் கால்வாய்கள் போன்று இவ்வீதிகள் காட்சியளிக்கின்றன.

இது தொடர்பில் புதுக்குயிருப்பு பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட சில வீதிகள் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளன. ஏனைய வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்;கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X