Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீதியில் அலைந்து திரிந்த நபரை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து உள நல சிகிச்சைக்கு உட்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வியாழக்கிழமை (18) உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த நபர் தொடர்பான வைத்திய அறிக்கையினை எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 02ஆம் திகதி, மன்றில் சமர்பிக்குமாறு நீதிவான், யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீதியில் அலைந்து திரிந்து அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார், புதன்கிழமை (17) கைது செய்திருந்தனர்.
அவரின் வயதினையும் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்ட பொலிஸார் 'ஏ'அறிக்கை மூலம் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
12 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago