2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் கால் முறிவடைந்தது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பாதசாரிக் கடவையினைக் கடக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, வாகனமொன்று  மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் கால்கள் முறிவடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம், கஸ்தூரியர் வீதியில் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஊழல் தடுப்புப் பரிவில் கடமையாற்றும் குமார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இச் சம்பவத்தில், கால்கள் முறிவடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .