George / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
நீர்வேலி மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து நகை, பணம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உடமைகள், வியாழக்கிழமை (17) அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1.34 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 34 பவுண் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் இலங்கை பணம் மற்றும் 8 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்கள் என்பன இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தருணம், வீட்டுக்குள் உள்நுழைந்து இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஒருவரின் உடமைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago