2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா கட்டடம் திறக்கப்பட்டது

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் என்ன கருத்துக்கு அமைவாக, யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா கட்டடம், இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

இளைஞர் - யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திறந்து வைக்கும் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம் ஏ சுமந்திரன், மாநகரசபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நிலையத்தின் ஊடாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் - யுவதிகள் தமக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதுடன், தமது விவரங்களைப் பதிவு செய்து, நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் தேவையான வேலைகளை விண்ணப்பிக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .