Janu / 2024 மே 23 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு தனியார் நிறுவனம் ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக, சேலை உள்ளிட்ட உடுப்புகள் அடங்கிய பொதி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியினுள் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளையும் மறைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பொதியினை பெற்றுக்கொண்டவர் மற்றும் அதற்கான பணத்தினை வழங்கிய பெண் உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பில் இருந்து அவர்களுக்கு பொதியினை அனுப்பி வைத்த நபரை கொழும்பில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெற்று, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எம்.றொசாந்த்
6 minute ago
17 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
40 minute ago