Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதில் எந்தவித மாற்றமும் இல்லை என, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களைப் படிப்படியாக விடுவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அவர்களுடைய படகுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை அரசுடமையாக்க உள்ளோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில், குளத்தை அண்டிய கிராம அபிவிருத்தி என்ற திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நேற்று காலை இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சரிடம், வடக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்து விடுவித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களை இங்கு தடுத்து வைக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், அவர்களுடைய படகுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை அரசுடமையாக்கவுள்ளோம். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை' என்றார்.
'வருகின்ற மாதம் வடக்கில் உள்ள மீனவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள், இந்தியா சென்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கும் இலங்கை வந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்கள். அதன் பின்னர், நானும் எமது மத்திய அரசாங்கப் பிரதிநிதிகளும் இந்தியா சென்று, மத்திய அரசாங்கத்துடன் பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கவுள்ளோம். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது வடக்கு மீனவர்கள் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மீனவர்களுமே ஆவர். எனவே, எமது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு நல்ல முடிவை எடுப்பேன்' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago