Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'எதிரிகள், துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்' என்ற தலைப்புடன் இன்றைய தினம் ஒரு சில பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(29) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
'எதிரிகள், துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்' என்ற தலைப்புடன் அச்செய்தியில் நானும் எமது கட்சியின் உபதலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமும் (ஜனா) கூறியதாக வெளிவந்த செய்தி எம்மால் குறிப்பிடப்படவில்லை. அது உண்மைக்கு புறம்பானது.
இச்செய்தியானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினதோ அல்லது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எமது கருத்தோ அல்ல என்பதையும் மிகவும் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஞாயிற்றுக்கிழமை(27) கூடிய எமது கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமாக கட்சியின் நிலைப்பாட்டை ஊடக அறிக்கை மூலமாக தெளிவுபடுத்தி இருந்தோம்.
தமிழ் மக்களின் ஒற்றுமை என்ற பலத்தின் ஊடாகவே எமது அரசியல் உரிமைகளையும் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.
இந்த நிலையில் எப்படி இந்த வார்த்தையை நாம் பிரயோகித்திருக்க முடியும். இக்கருத்தினை நாம் ஒரு போதும் கொண்டிருக்கவுமில்லை.
இதேவேளை, தமிழ் மக்கள் பேரவைக்கு கருணா, டக்ளஸ் போன்றவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது நல்லது என வடக்கு முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது எமக்கு கவலை தருகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
19 minute ago
25 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
49 minute ago