2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

130 கிலோகிராம் கஞ்சாவுடன் ஐவர் கைது

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணிநேரத்துக்குள் 130 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐவரைக் கடற்படையினர் கைது செய்து பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக மதுவரித்திணைக்கள வடமாகாண ஆணையாளர் நாகப்பர் சோதிநாதன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு, வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடல்பகுதி மார்க்கமாக கடத்திவரப்பட்ட 30 கிலோகிராம் கஞ்சாவினை கடற்படையினர் மீட்டிருந்தனர்.

அத்துடன் அதே பகுதியினை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்து மதுவரி நிலைய அதிகாரிகளிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல் இன்று சனிக்கிழமை (20) காலை 100 கிலோ கேரளா கஞ்சாவினை கடல்மார்க்கமாக எடுத்துவந்த மூவர் மணல்காட்டுப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் இருவர் மணற்காடு பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் கரவெட்டிப் பகுதியினைச் சேர்ந்தவர் என்றும் ஆணையாளர் மேலும் கூறினார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 1 கோடியே 95 இலட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களையும் சான்றுப்பொருட்களையும் பருத்தித்துறை நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X