2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தில் புதன்கிழமை (06) அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் இருவரை புதன்கிழமை (06) கைது செய்துள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியிலுள்ள வீட்டினுள் துணியால் முகத்தைக் கட்டியபடி வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள், உறங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த நான்கு பவுண் பெறுமதியான நகைகளை பொல்லுகள், அலவாங்கு என்பவற்றினைக் காட்டி மிரட்டிப் பெற்றுக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து, அதே பகுதியிலுள்ள இன்னொரு வீட்டு கதவை தட்டியபோது வீட்டிலிருந்தோர் அவலக்குரல் எழுப்பவே திருடர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அக்கராயன் பொலிஸார், இருவரை கைது செய்ததுடன் ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X