2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

​செங்கோலை தூக்க சிவாஜிலிங்கம் முயற்சி

George   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் வரவு -செலவுத் திட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (20) முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான தற்போது விவாதம் இன்று புதன்கிழமை இடம்பெறுகின்றது.

வடமாகாண உறுப்பினர் கே.சயந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகளை விமர்சித்து உரையாற்றினார். இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.
“உங்களுடைய விமர்சனங்களை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள். தற்போது வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலான விவாதம் இடம்பெற்று வருகிறது. அது தொடர்பாக மட்டும் உரையாற்றுங்கள்” என தெரிவித்தனர்.

எனினும் சயந்தன் தனது உரையை தொடர்ந்தமையால், சபையில் அமளி துமளி ஏற்பட்டது. இதன் உச்சக்கட்டமாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், செங்கோலை தூக்க முயற்சி செய்தார். இதனையடுத்து, வடமாகாண சபையின் அமர்வுகள் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X