2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'நான் வெளி வருவேன்' : மரண தண்டனை குற்றவாளி

George   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“நான் குற்றம் செய்யவில்லை. ஆனால், தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என, நெடுந்தீவுச் சிறுமி கொலை வழக்கின் குற்றவாளி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை, கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவரை யாழ். மேல் நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டு வெள்ளிக்கிழமை (07) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட போது, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரியிடம் ஏதேனும் செல்ல விரும்புகின்றீரா? என வினாவினார்.

இதன்போது, “நான் செய்யாத குற்றத்துக்காக நீதிமன்றம் என்னை குற்றவாளியாக கண்டு தண்டனை வழங்கியுள்ளது. இது தொடர்பில் நான் மேன் முறையீடு செய்து இந்த வழக்கில் இருந்து வெளிவருவேன் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .