2025 ஜூலை 19, சனிக்கிழமை

மதுபோதையில் வாகனங்கள் செலுத்திய சாரதிகளுக்கு 1,12,500 ரூபாய் அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மதுபோதையில் வாகனங்கள் செலுத்திய 15 பேருக்கு, தலா 7,500 ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் திங்கட்கிழமை (04) தீர்ப்பளித்தார்.

சுன்னாகம் போக்குவரத்து பொலிஸாரால் டிசெம்பர் மாத இறுதி வாரத்தில் குறித்த 15 சாரதிகளும் கைது செய்யப்பட்டு இவர்களுக்கதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, சாரதிகளை கடுமையாக எச்சரிக்கை செய்த நீதிபதி, இனிவரும் காலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதிபத்திரத்தினை 12 மாதகாலம் இரத்து செய்வதாக கடுமையாக எச்சரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X