Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி உரிய நேரத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள சகல அரச மற்றும் தனியார் பஸ்கள் தமது சேவையை செவ்வனே வழங்க வேண்டும் என்று வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், உரிய நேரத்தில் பஸ் சேவை இடம்பெறாததால் பரீட்சை நிலையங்களுக்கு தாமதமாக வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தப் பரீட்சையானது மாணவர்களின் முக்கியமான பரீட்சையாக இருப்பதனால், இந்த விடயத்தில் சகல பயணிகள் போக்குவரத்து பஸ் நடத்துனர்களும் சாரதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago