2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'யாழில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன'

Kogilavani   / 2017 ஏப்ரல் 04 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

"யாழ். மாவட்டத்தில் மலிந்திருந்த, போதைப்பொருள் மற்றும் வன்முறைகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன" என்று, யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (04) நடைபெற்றது.

இதன்போது, யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கஞ்சா உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களைக் கடத்தல்களை பொது மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவது தொடர்பில் இக்கலந்துரையாடப்பட்டது.

மேலும், பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதன்போது, "கடந்த காலங்களை விட தற்போது, போதைப்பொருள் குற்றங்கள், வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன" என, மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

பாரிய குற்றச்செயல்கள் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ தர்மரட்ண இங்கு குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .