2025 ஜூலை 07, திங்கட்கிழமை

லலித், குகன் வழக்கு: ஹெகலியவுக்கு பிடியாணை

Thipaan   / 2015 நவம்பர் 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2011 ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முன்னணி சோசலிச கட்சியை சேர்ந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.  
அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது. அவர்கள் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நடத்தப்படும் என, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை தற்போது யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

வழக்கு விசாரணைகளின் போது, இருவரும் காணமற்போனவர்களின் விவரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்.

அதனால் அவர்களுக்கு அரச தரப்பால் அழுத்தங்கள் தொடர்ந்து இருந்தன என அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

லலித், குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, இருவரும் கடத்தப்படவில்லை பொலிஸாரின் விசாரணையில் இருக்கின்றனர், விசாரணை முடிந்த பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார் என நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்ன, கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹெகலியவின் கருத்துக்கமைய, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
ஹெகலிய ரம்புக்வெல ஆஜராகாததையடுத்து, பிடியாணை பிறப்பித்து நீதவான் பொ.சிவகுமார்  வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டார்.

காணாமற்போனவர்கள் தொடர்பில் யாழப்;பாணத்தில் நடத்தப்பட்ட பிரசாரம் ஒன்றில் லலித், குகன் மற்றும் ஹந்துன்நெத்தி ஆகியோரை இனந்தெரியாத நபர்கள் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .