Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
வடக்கு மாகாணத்தில் 1252 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், அவற்றை அடையாளம் கண்டு பட்டதாரிகளை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு கோரி காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் அவைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் மாகாண சபையால் தகவல்கள் திரட்டப்பட்டிருந்தது. அதற்கமைய மாகாணத்தில் 1252 வெற்றிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், பட்டதாரிகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, தமக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்குப் பட்டதாரிகள் போராடி வரும் நிலையில், மாகாண சபை மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சபையின் உறுப்பினர், வியாழக்கிழமை (06) அமர்வில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அவைத்தலைவர், “கடந்த 14.03.2017 ஆம் திகதி, பட்டதாரிகள் விடயம் தொடர்பில் சபையில் பேசபட்டதற்கு இணங்க 18.03.2017 ஆம் திகதி, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
இதற்கமைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு 180 இடங்கள், சுகாதார அமைச்சில் 22 இடங்கள், முதலமைச்சர் அமைச்சில் 15 இடங்கள், கல்வி அமைச்சில் 1051 இடங்கள் வெற்றிடமாக உள்ளது. இவ்வாறு மாகாணத்தில் மொத்தமாக 1252 வெற்றிடங்கள் உள்ளது. ஆகவே அவை தொடர்பாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கேட்கப்பட்டுள்ளது” என சிவஞானம் மேலும் தெரிவித்தார்.
55 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
4 hours ago