2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'வெளியில் வந்தவுடன் வெட்டுவேன்'

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம், நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி சந்தைக்குச் சென்ற ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சி பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்றது.

சாட்சிப் பதிவுகளின் பின்னர் சந்தேக நபரை பொலிஸார் அழைத்து சென்ற போது, அங்கிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி கையிலிருந்த உணவுப்பொதியை வீசியெறிந்து, 'நான் வெளியில் வந்தவுடன் உங்களை வெட்டுவேன்' என தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான இறுதித்தீர்ப்பு வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .