2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட காணி அலுவலகத் திறப்பு விழா 5இல்

Suganthini Ratnam   / 2011 மே 03 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

காணிப் பயன்பாடு கொள்கைத்திட்டமிடல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத் திறப்பு விழா எதிர்வரும் 05ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக தென்னக்கோன் பண்டாராவினால் இந்த் அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் சிறிபால கமல்நாத், காணி அமைச்சின் செயலாளர் அசோக் பிரீஸ், காணிப் பயன்பாடு கொள்கைத்திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாந்தி பெர்னாண்டோ, வடமாகாண காணி அமைச்சின் செயலாளர், வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X