Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.குடாநாட்டில் நிர்மாணிக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டம் முழுமையடைவதற்கு இன்னும் 6 மாத காலம் எடுக்கும் என யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகர் எஸ். மகாலிங்கம் தெரிவித்தாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்iறு வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் மாவட்ட செயலாளருக்குமிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் யாழ். மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டு திட்டம் தொடர்பாக ஆராயப்பட்ட போதே, இத்திட்டம் நிறைவடைவதற்கு இன்னும் ஆறு மாத காலம் எடுக்கும் எனத் தெரிவித்தாக அவர் குறிப்பிட்டார்.
யாழில் இந்திய வீட்டுத்திட்ட பணிகள் முழுமையடையவில்லை. மக்களின் வாழ்விடங்கள் இடிக்கப்பட்டு கட்டப்பட்டு வருவதினால் யாழில் மக்கள் பலர் இந்திய வீட்டு ;திட்டத்தை நம்பியிருப்பதாகவும் இது முழுமை பெறாமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் தான் அவர்களிடம் தெரிவித்ததாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார்
யாழ்.மாவட்டத்தில் முதல் கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் 150 வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 30 வீடுகளை தவிர ஏனையவை முழுமையடையவில்லை என மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago