2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்து, பௌத்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 2014

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, யோ.வித்தியா

புத்தசாசன மற்றும் மதஅலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் பௌத்த மத அலுவல்கள் திணைக்களமும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து யாழ்.கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இந்து பௌத்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியினை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்து, பௌத்த மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், இந்து, பௌத்த மதத்தினரினை ஓர் இடத்தில் சந்திக்க வைத்து பரஸ்பரம், கருத்துப் பரிமாற்றங்களை செய்வதுடன் இரு இனங்களுக்கிடையிலான கலை, கலாசார, பாரம்பரிய விழுமியங்களை பரஷ்பரம் அறிந்துகொள்வதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்துவதாக அமையவுள்ளது.

இந்நிகழ்விற்கு பௌத்த மத அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் இந்து, பௌத்த அறநெறிப்பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .