A.P.Mathan / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 45 முன்னாள் போராளிகள், அவர்களின் பெற்றோரிடம் நாளை வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதன்போது காலை 9 மணிக்கு தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்துக்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர், அங்கு கடந்த ஒன்றரை வருடங்களாக புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளில் 45 பேரை அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கவுள்ளார்.
தெல்லிப்பளையில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு வாழ்வினை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ளக்கூடியவகையில் தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புனர்வாழ்வு பெற்றுவரும் ஏனைய முன்னாள் போராளிகளும் இவ்விதம் படிப்படியாக விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
32 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago