2025 ஜூலை 19, சனிக்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனையால் ரூ. 6 இலட்சம் வருமானம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்.பிரதேசத்தில் கடந்த 7 மாதங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்திகள், விற்பனைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக யாழ்.பிரதேச மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 6 இலட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிரதேச மதுவரி திணைக்களத்தினர் வியாழக்கிழமை (14)  தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்ற எல்லைகளுக்குள் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, மேலதிகமாக கள்ளு வைத்திருந்தமை மற்றும் அனுமதிப்பத்திரமின்றி கள் விற்பனை செய்தமை ஆகிய குற்றங்கள் தொடர்பில் 341 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், அந்தந்தப் பிரதேச நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டவேளை, நீதிமன்றங்களால், 6 இலட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபா ஆன தொகை தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X