2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கீரிமலை நகுலேஸ்வர கொடியேற்றம் 14இல்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 28 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 நாட்களுக்கு திருவிழா நடைபெறவுள்ளது.

திருவிழாக் காலத்தில் தினமும் முற்பகல் 10.30 மணிக்கு கொடித்தம்ப பூஜையும் 11 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் மாலை  05 மணிக்கு கொடித்தம்ப பூஜையும் 05.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் நடைபெறவுள்ளன.

பெப்ரவரி 27ஆம் திகதி தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது. அதேதினம் இரவு மஹாசிவராத்திரி அனுஷ்டிக்கப்படவுள்ளது.  28ஆம் திகதி கண்டங்கி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

யாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலைகளின் கல்லூரி மாணவ, மாணவிகளின் நற்சிந்தனை, கூட்டுப் பிரார்த்தனை, திருமுறைப் பாடல்கள், இசை, நடன ஆகியனவுத் திருவிழாக் காலத்தில் நடைபெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .